சஞ்சய் யாதவ் போராட்டம் வீண் - நெல்லையை 5 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது கோவை அணி

முதலில் ஆடிய கோவை அணி 177 ரன்களை எடுத்தது. விக்கெட் கீப்பர் சுரேஷ்குமார் அதிரடியாக ஆடி 75 ரன்களை குவித்தார்.
பொறுப்புடன் ஆடிய சஞ்சய் யாதவ், பாபா அபராஜித்
பொறுப்புடன் ஆடிய சஞ்சய் யாதவ், பாபா அபராஜித்
Published on

சேலம்:

6-வது டி.என்.பி.எல். டி20 ஓவர் கிரிக்கெட் தொடரின் கடைசி கட்ட லீக் ஆட்டங்கள் சேலத்தை அடுத்த வாழப்பாடியில் உள்ள சேலம் கிரிக்கெட் பவுண்டேசன் மைதானத்தில் நடக்கிறது.

இன்று நடைபெற்ற 26-வது லீக் ஆட்டத்தில் கோவை, நெல்லை அணிகள் மோதின. டாஸ் வென்ற கோவை அணி பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் பேட்டிங் செய்த கோவை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 177 ரன்களை எடுத்துள்ளது. விக்கெட் கீப்பர் சுரேஷ்குமார் அதிரடியாக ஆடி 48 பந்தில் 3 சிக்சர், 7 பவுண்டரி உள்பட 75 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். தொடக்க ஆட்டக்காரர்கள் கங்கா ஸ்ரீதர் ராஜு 48 ரன்னில் அவுட்டாகி அரை சதத்தை நழுவவிட்டார். கடைசி கட்டத்தில் சிறப்பாக ஆடிய சாய் சுதர்சன் 18 பந்தில் 35 ரன்கள் எடுத்தார்.

இதையடுத்து, 178 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெல்லை அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் சூர்யபிரகாஷ் 45 ரன்னும், பாபா அபராஜித் 37 ரன்னும் எடுத்தனர்.

அடுத்து இறங்கிய சஞ்சய் யாதவ் மீண்டும் அதிரடியில் மிரட்டி அரை சதம் அடித்து 54 ரன்னில் அவுட்டானார்.

இறுதியில், நெல்லை அணி 9 விக்கெட்டுக்கு 172 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் கோவை அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com