

இந்தியா- ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில், 3-வது மற்றும் கடைசி போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை நடக்கிறது.
கடந்த போட்டியில் தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் களம் இறக்கப்பட்டார். இதனால் சுப்மன் கில் 3-வது வீரராக களம் இறங்கினார். கே.எல். ராகுல் 6-வது வீரராக களம் இறங்கினார். அவர் தான் சந்தித்த முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார்.
கே.எல். ராகுல் 4-வது அல்லது 5-வது இடத்தில் களம் இறங்கி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். இந்த நிலையில்தான் 2-வது போட்டியில் மேலும் ஒரு இடம் பின்னால் தள்ளப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் நாளை நடைபெற இருக்கும் சேப்பாக்கம் போட்டியிலும் 6-வது இடத்தில்தான் களம் இறங்குவார் என இந்திய அணியின் துணை பயிற்சியாளர் ரியான டெ டோஸ்கேட் தெரிவித்துள்ளார்.
பேட்டிங் வரிசையின் பன்முகத்தன்மை மிகச் சிறப்பாக உள்ளது. ராகுலை பேட்டிங் வரிசையில் முன்னதாகக் களமிறக்குவது குறித்து பரிசீலிக்கப்படுவதாக நான் நினைக்கவில்லை. நாங்கள் ஜெய்ஸ்வாலை உன்னிப்பாகக் கவனிக்க விரும்புகிறோம். கடந்த ஆட்டத்தில் அவரால் ரன் எதுவும் எடுக்க முடியவில்லை என்பதால், அவருக்கு அனேகமாக மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்றார்.