நிகோலஸ் பூரன் அரை சதம் - கொல்கத்தா வெற்றிபெற 177 ரன்களை நிர்ணயித்தது லக்னோ

டாஸ் வென்ற கொல்கத்தா பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய லக்னோ 176 ரன்களை எடுத்தது.
நிகோலஸ் பூரன் அரை சதம் - கொல்கத்தா வெற்றிபெற 177 ரன்களை நிர்ணயித்தது லக்னோ
Published on

கொல்கத்தா:

16-வது ஐபிஎல் தொடரில் 68-வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மோதின. டாஸ் வென்ற கொல்கத்தா பவுலிங் தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் லக்னோ அணி களமிறங்கியது. கொல்கத்தா அணியினரின் அபார பந்துவீச்சில் லக்னோ அணி சிக்கி விரைவில் விக்கெட்டுகளை இழந்தது. இதனால் 73 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.

அடுத்து இறங்கிய ஆயுஷ் பதோனியுடன், நிகோலஸ் பூரன் ஜோடி சேர்ந்தார். 6வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 74 ரன்கள் சேர்த்த நிலையில் பதோனி 25 ரன்னில் ஆட்டமிழந்தார்.

ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் நிகோலஸ் பூரன் அதிரடியாக ஆடி அரை சதமடித்து 58 ரன்னில் வெளியேறினார்.

இறுதியில் லக்னோ அணி 8 விக்கெட் இழப்புக்கு 176 ரன்களை எடுத்துள்ளது.

கொல்கத்தா சார்பில் ஷர்துல் தாக்குர், வைபவ் அரோரா, சுனில் நரைன் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து, 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி களமிறங்குகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com