ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட்.. சாம்பியன் பட்டம் வென்றது வங்காளதேச அணி

வங்காளதேசம் தரப்பில் அஷிகுர் ரஹ்மான் ஷிப்லி சதம் அடித்து அசத்தினார். வங்காளதேச அணி 195 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது.
ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட்.. சாம்பியன் பட்டம் வென்றது வங்காளதேச அணி
Published on

துபாய்:

10-வது ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் (19 வயதுக்கு உட்பட்டோர்) துபாயில் நடைபெற்றது. 8 அணிகள் பங்கேற்றிருந்த இந்த தொடரின் லீக் ஆட்டங்கள் முடிவில் இந்தியா, வங்காளதேசம், பாகிஸ்தான் மற்றும் யுஏஇ அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன.

இதையடுத்து நடைபெற்ற அரையிறுதி ஆட்டங்களில் வங்காளதேச அணி இந்தியாவையும், யுஏஇ அணி பாகிஸ்தானையும் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறின. இந்நிலையில் சாம்பியன் பட்டம் யாருக்கு என்பதை தீர்மானிக்கு இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது.

இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற யுஏஇ அணி முதலில் பீல்டிங் செய்வதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய வங்காளதேச அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 282 ரன்கள் குவித்தது. அதிக பட்சமாக அஷிகுர் ரஹ்மான் ஷிப்லி சதம் அடித்து அசத்தினார்.

இதையடுத்து 283 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய யுஏஇ அணி வங்காளதேச வீரர்களின் அபார பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் வெறும் 24.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 87 ரன்கள் மட்டுமே அடித்தது. இதன் மூலம் வங்காளதேச அணி 195 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது.

வங்காளதேச தரப்பில் அதிகபட்சமாக மருப் மிருதா மற்றும் ரோஹனத் டவுல்லா போர்சன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com