மகளிர் டி20 உலகக் கோப்பை: வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி ஆறுதல் வெற்றி பெற்றது அயர்லாந்து

அயர்லாந்தின் ஒர்லா பிரென்டர்கஸ்ட் ஆட்ட நாயகி விருது வென்றார்.
orla prendergast
Published on

மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது.

குரூப் பி பிரிவில் இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், நியூசிலாந்து, இலங்கை, ஸ்காட்லாந்து, அயர்லாந்து அணிகள் உள்ளன.

இந்நிலையில், அயர்லாந்து அணி நேற்று வெஸ்ட் இண்டீஸ் அணியை எதிர்கொண்டது. டாஸ் வென்ற அயர்லாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 128 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சினெலி ஹென்றி 27 ரன்கள் எடுத்தார். ஹெய்லி மேத்யூஸ் 22 ரன்கள் எடுத்தார்.

இதையடுத்து, 129 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அயர்லாந்து அணி களமிறங்கியது. அந்த அணியின் ஒர்லா பிரென்டர்கஸ்ட் சிறப்பாக ஆடி அரை சதம் கடந்து 44 பந்தில் 63 ரன்கள் குவித்து வெற்றிக்கு வழிவகுத்தார். எமி ஹன்டர் 28 ரன்கள் சேர்த்தார்.

இறுதியில், அயர்லாந்து அணி 18.1 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 129 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அயர்லாந்தின் ஒர்லா பிரென்டர்கஸ்ட் ஆட்ட நாயகி விருது வென்றார்.

வெஸ்ட் இண்டீஸ் அணி தோல்வி அடைந்தாலும் புள்ளிகள் மற்றும் ரன்ரேட் அடிப்படையில் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

X

Maalai Malar
www.maalaimalar.com