நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: அயர்லாந்து முதல் இன்னிங்சில் 179 ரன்னுக்கு ஆல் அவுட்

நியூசிலாந்தின் நாதன் ஸ்மித் 6 விக்கெட் கைப்பற்றி அசத்தினார்.
adair
Published on

அயர்லாந்து, நியூசிலாந்து இடையிலான ஒரே ஒரு டெஸ்ட் போட்டி பெல்பாஸ்டில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற அயர்லாந்து அணி பவுலிங் தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் ஆடிய நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 8 விக்கெட்டுக்கு 490 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டிக்ளேர் செய்தது. டாம் பிளெண்டெல் 186 ரன்னிலும், ரச்சின் ரவீந்திரா 121 ரன்னிலும், பாக்ஸ்கிராப்ட் 98 ரன்னிலும் அவுட்டாகினர்.

அயர்லாந்து சார்பில் மார்க் அடைர் 3 விக்கெட் வீழ்த்தினார்.

தொடர்ந்து ஆடிய அயர்லாந்து சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது.

7வது விக்கெட்டுக்கு இணைந்த ஆண்டி மெக் பெரின்-மார்க் அடைர் ஜோடி நிதானமாக ஆடியது. இந்த ஜோடி 116 ரன்கள் சேர்த்த நிலையில் மார்க் அடைர் 40 ரன்னில் அவுட்டானார்.

இறுதியில், அயர்லாந்து முதல் இன்னிங்சில் 179 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. மெக் பெரின் 73 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

நியூசிலாந்தின் நாதன் ஸ்மித் 6 விக்கெட்டும், பென் சீயர்ஸ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

311 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை ஆடிய அயர்லாந்து இரண்டாம் நாள் முடிவில் 2 விக்கெட்டுக்கு 65 ரன்கள் எடுத்துள்ளது. நியூசிலாந்து அணியை விட இன்னும் 246 ரன்கள் பின் தங்கியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com