டெல்லி அணியில் இணையாதது குறித்து கேட்ட ரசிகர்: பதில் அளித்த மிட்செல் ஸ்டார்க் மனவைி அலிஷா ஹீலி

காயம் காரணமாக டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் மிட்செல் ஸ்டார்க் இன்னும் இணையாமல் உள்ளார்.
டெல்லி அணியில் இணையாதது குறித்து கேட்ட ரசிகர்: பதில் அளித்த மிட்செல் ஸ்டார்க் மனவைி அலிஷா ஹீலி
Published on

ஐ.பி.எல். கிரிக்கெட் 2026 சீசன் திருவிழா நாளை தொடங்க இருக்கிறது. ஆனால், ஆஸ்திரேலியா வேகப்பந்து வீச்சின் மும்மூர்த்திகளாக விளங்கும் ஸ்டார்க், பேட் கம்மின்ஸ், ஹேசில்வுட் ஆகியோர் காயத்தால் போட்டியில் பங்கேற்க முடியாத நிலை உள்ளது.

இதில் ஹேசில்வுட் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் இணைந்து பயிற்சி மேற்கொண்டு வருகிறார். இருந்த போதிலும் நாளைய போட்டியில் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. பேட் கம்மின்ஸ் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் இணைந்துள்ளார். இருந்த போதிலும் தொடக்க போட்டிகளில் விளையாடமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் மிட்செல் ஸ்டார்க் மட்டும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் இணையவில்லை.

இதுகுறித்து எதிர்மறையாக கருத்துகள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், ஹேசில்வுட் மற்றும் பேட் கம்மின்ஸ் அவர்களுடைய அணியில் இணைந்துள்ள போது, ஸ்டார்க் மட்டும் டெல்லி அணியில் இணையாதது எங்களை போன்ற டெல்லி அணிக்கு அநியாயமானது என ஸ்டார்க் மனைவியும் முன்னாள் ஆஸ்திரேலிய அணி கேப்டனுமான அலிஷா ஹீலியிடம் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி ரசிகர் ஒருவர் சமூக வலைத்தளம் மூலம் கேள்வி எழுப்பியிருந்தார்.

அதற்கு அலி ஹீலி "தனது கணவராகிய ஸ்டார்க், ஒருவேளை காயம் அடைந்திருக்கலாம். அவரால் பந்து வீச முடியவில்லை என்றால், எப்படி விளையாட முடியும். அவர் முழு தகுதி பெற்றால், உறுதியாக அணியில் இருப்பார்" என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com