154.2 கி.மீ. வேகத்தில் பந்து வீசிய குஜராத் டைட்டன்ஸ் இளம் வீரர் அசோக் சர்மா | IPL 2026

குஜராத் டைட்டன்ஸ் அணியைச் சேர்ந்த அசோக் சர்மா இந்த சீசனில் அதிகவேகமாக பந்து வீசி சாதனைப் படைத்துள்ளார்.
154.2 கி.மீ. வேகத்தில் பந்து வீசிய குஜராத் டைட்டன்ஸ் இளம் வீரர் அசோக் சர்மா | IPL 2026
Published on

ஐபிஎல் 2026 கிரிக்கெட்டில் அகமதாபாத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் குஜராத் டைட்டன்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.

முதலில் ராஜஸ்தான் ராயல்ஸ் பேட்டிங் செய்தது. குஜராத் டைட்டன்ஸ் அணியில் இடம் பிடித்திருந்த 23 வயதான இளம் வீரரான அசோக் சர்மா 16-வது ஓவரை வீசினார். இந்த ஓவரின் கடைசி பந்தை 154.2 கி.மீ. வேகத்தில் வீசினார். இந்த சீசனின் அதிவேக பந்து இதுவாகும். முன்னதாக அன்ரிச் நோர்ஜே 150.7 கி.மீ. வேகத்தில் வீசியிருந்தார்.

அசோக் சர்மா ஒரு பந்தை மட்டும் அதிவேமாக வீசவில்லை. சராசரியாக 140 கி.மீ. வேகத்தில் வீசினார். அவரது பந்து வீச்சு அனைவரையும் ஈர்த்தது. இவர் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர். முதலில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் நெட் பவுலராக சேர்ந்துள்ளார். அவரது பந்து வீச்சு சிறப்பாக இருக்க கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கடந்த 2022-ல் 55 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளது. கடந்த வருடம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு திரும்பினார். இந்த நிலையில்தான் தற்போது இந்த சீசனுக்கான ஏலத்தில் குஜராத் டைட்டன்ஸ் 90 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளது.

இவர் 11 டி20 போட்டிகளில் 33 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். 4 முதல்பர போட்டிகளில் விளையாடி 14 விக்கெட்டுகளும், ஏழு லிஸ்ட் ஏ போட்டிகளில் விளையாடி 13 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார். காயம் ஏற்படாமல் இருந்தால் இந்த சீசனில் ஆதிக்கம் செலுத்த வாய்ப்புள்ளது. நேற்றைய போட்டியில் 4 ஓவரில் 37 ரன்கள் விட்டுக்கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com