IPL 2026 | ஆரஞ்சு கேப் பட்டியல்: அதிரடியால் முதலிடம் பிடித்தார் வைபவ் சூர்யவன்ஷி

ராஜஸ்தான் அணி புள்ளிப்பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது.
IPL 2026 | ஆரஞ்சு கேப் பட்டியல்: அதிரடியால் முதலிடம் பிடித்தார் வைபவ் சூர்யவன்ஷி
Published on

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இதுவரை 64 போட்டிகள் நிறைவடைந்துள்ளன.

நேற்று ஜெய்ப்பூரில் நடந்த 64-வது லீக் போட்டியில் ராஜஸ்தான், லக்னோ அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பவுலிங் தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் ஆடிய லக்னோ அணி 220 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய ராஜஸ்தான் 225 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

ராஜ்ஸ்தான் சார்பில் வைபவ் சூர்யவன்ஷி 38 பந்தில் 93 ரன்கள் குவித்தார்.

இந்நிலையில், வைபவ் சூர்யவன்ஷி ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் குவித்து ஆரஞ்சு தொப்பியை கைப்பற்றி உள்ளார். இவர் 13 ஆட்டங்களில் 579 ரன்களைக் கடந்து முதலிடத்தில் உள்ளார்.

இரண்டாவது இடத்தில் லக்னோ அணியின் மிட்செல் மார்ஷ் 563 ரன்னும், 3வது இடத்தில் ஐதராபாத் அணியின் கிளாசன் 555 ரன்னும் குவித்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com