ஐபிஎல் 2026 சீசனில் அதிக ரன்கள் அடித்தவர் சூர்யவன்ஷிதான்..!

ஒரு சதம், 5 அரைசதங்களுடன் சூர்யவன்ஷி இந்த சீசனில் 16 போட்டிகளில் விளையாடி 776 ரன்கள் குவித்துள்ளார்.
ஐபிஎல் 2026 சீசனில் அதிக ரன்கள் அடித்தவர் சூர்யவன்ஷிதான்..!
வைபவ் சூர்யவன்ஷி
Published on

ஐபிஎல் 2026 சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியைச் சேர்ந்த 15 வயதான சூர்யவன்ஷி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். எலிமினேட்டர், குவாலிபையர்-2 ஆகியவற்றில் ருத்ர தாண்டவம் ஆடினார். இரண்டு போட்டிகளிலும் தலா 90 ரன்களுக்கு மேல் அடித்து ஆட்டமிழந்தார்.

இந்த தொடரில் அதிகபட்சமாக ஒரு போட்டியில் 103 ரனகள் விளாசியுள்ளார். மொத்தம் 16 போட்டிகளில் விளையாடி 1 சதம், 5 அரைசதங்களுடன் 776 ரன்கள் குவித்துள்ளார். இதன் மூலம் ஐபிஎல் 2026 சீசனில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.

அவருக்கு அடுத்தப்படியாக சுப்மன் கில், சாய் சுதர்சன் இருந்தனர். இன்றைய போட்டியில் அரைசதம் அடித்தால் சூர்யவன்ஷியை பின்னுக்குத்துள்ள வாய்ப்பு இருந்தது. ஆனால், கில் 10 ரன்னிலும், சாய் சுதர்சன் 12 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

இதன்மூலம் சுப்மன் கில் 732 ரன்கள் எடுத்து 2-வது இடத்தையும், சாய் சுதர்சன் 722 ரன்கள் எடுத்து 3-வது இடத்தையும் பிடித்துள்ளனர். சுப்மன் கில் 1 சதம், 6 அரைசதம் அடித்துள்ளார். சாய் சுதர்சன் ஒரு சதம், 8 அரைசதம் அடித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com