திருச்சி கிழக்கு தொகுதி கண்ணோட்டம்

மலைக்கோட்டை மாநகர் என்று அழைக்கப்படும் திருச்சி, காவிரிக் கரையோரம் அமைந்துள்ள தமிழகத்தின் 4-வது பெரிய நகரமாகும்.
திருச்சி கிழக்கு தொகுதி
திருச்சி கிழக்கு தொகுதி
Published on

உயர்ந்து நிற்கும் மலைக்கோட்டையும், அதன்மேல் அமைந்துள்ள விநாயகர் கோவிலும் திருச்சி நகரின் பிரதான அடையாளங்கள், நகரின் மற்றொறு அடையாளம் ஸ்ரீரங்கம் ரெங்கநாத சுவாமி கோவில். இந்த கோவில் காவிரி ஆற்றின் ஓரம் எழிலுற அமந்துள்ளது. நகரிலுள்ள மற்றொரு பிரபல கோவில் திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவில்.

தமிழகத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ள திருச்சி, வளர்ந்து வரும் தொழில் நகரமாகும். மையப்பகுதியில் இது இருப்பதாலும், வேகமாக வளர்ந்து வருவதாலும் தலைநகரை சென்னையிலிருந்து இங்கு மாற்ற முன்னாள் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர். திட்டமிட்டது நினைவு கூறத்தக்கது.

23.26 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள திருச்சி மாவட்டத்தில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 23,32,886 பேர் உள்ளனர். 

ஒரு பாராளுமன்றத் தொகுதியையும், 9 சட்டமன்ற தொகுதி அதாவது திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு, ஸ்ரீரங்கம், திருவெறும்பூர், மணப்பாறை, மண்ணச்சநல்லூர், முசிறி, துரையூர் (தனி) ஆகிய சட்டமன்ற தொகுதிகளை திருச்சி பெற்றுள்ளது.

இதில் திருச்சியின் அடையாளச் சின்னமாக விளங்கும் மலைக்கோட்டையை உள்ளடக்கி அமைந்துள்ளது கிழக்கு தொகுதி.

1951-ம் ஆண்டு முதல் திருச்சி-1 என அழைக்கப்பட்டு வந்த இத்தொகுதி 2008-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட தொகுதி மறுசீரமைப்புக்குப் பிறகு திருச்சி கிழக்கு தொகுதி என பெயர் மாற்றம் செய்யப்படடது. மலைக்கோட்டை. நத்தர்ஷா பள்ளிவாசல், செயின்ட் ஜோசப் சர்ச் உள் ளிட்ட முக்கிய வழிபாட்டு தலங்கள் மற்றும் நாள்தோறும் லட்சக்கணக்கானோர் வந்து செல்லும் விமான நிலையம், சத்திரம் பேருந்து நிலையம், காந்தி சந்தை, பெரியகடைவீதி, என்.எஸ்.பி. சாலை உள்ளிட் டவை அமைந்திருப்பது இத்தொகுதியின் சிறப்பம்சம்.

மாநகராட்சியின் 8,26, 33, 34, 5, 37, 38, 43, ஆகிய 25 வார்டுகளை கொண்டுள்ள இத்தொகுதியில் மொத்தம் 2,54,427 பேர் வாக்காளர்கள் உள்ளனர்.

தி.மு.க.வின் கோட்டையாக விளங்கிய இத்தொகுதியில் 1984, 1989-ல் மலர்மன்னன், 1996, 2001-ல் பரணிக்குமார், 2006-ல் அன்பில் பெரியசாமி ஆகியோர் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர்.

2011-ம் ஆண்டு நடந்த தேர்தலில் அ.தி.மு.க.வை சேர்ந்த மனோகரன் வெற்றி பெற்று அரசுக் கொறடாவாக பணியாற்றினார். 2016-ல் நடந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணி கட்சி சார்பாக போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஜெரோம் ஆரோக்கியராஜை 21,894 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற அ.தி.மு.க. வேட்பாளர் வெல்லமண்டி நடராஜன் சுற்றுலாத்துறை அமைச்சராக உள்ளார்.

முழுக்க முழுக்க நகர் சார்ந்த தொகுதி என்பதால் இங்கு வசிக்கும் மக்களுக்கான பிரச்சி னைகளுக்கு பஞ்சமே இல்லை. பள்ளிகள், கல்லூரிகள், இத்தொகுதியில் வளர்ச்சி என்றால் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் சத்திரம் பேருந்து நிலையம் ரூ.17 ஆயிரம் கோடியில் பணிகள் நடைபெற்று வருகிறது. விமான நிலைய விரிவாக்கப் பணிகள் மற்றும் புதுக்கோட்டை-திருச்சி நெடுஞ்சாலை அகலப்படுத்தும் பணி நடந்து வருகிறது.

வணிக வளாகங்கள் அதிகமாக இருப்பதால் இப்பகுதிகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல், குடிநீர் தட்டுப்பாடு, கழிவுநீர் மற்றும் குப்பைகளால் சுகாதார மின்மை என அடிப்படை பிரச்சினைகள் அதிகம் உள்ளன.

காந்தி மார்க்கெட் மற்றும் வெங்காய மண்டிகள் இடமாற்றம் சிங்காரத் தோப்பு பகுதிகளில் உள்ள யானைக் குளத்தில் வணிக வளாகம் கட்டுதல் என அடுக்கடுக்கான திட்டங்களில் சில கிடப்பில் போடப்பட்டுள்ளன.

இந்த கிழக்கு தொகுதியில் கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் வெற்றியை தீர்மா னிக்கும் வாக்காளர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com