

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்.சி.பி.)- டெல்லி கேப்பிட்டல்ஸ் இடையிலான போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. ஆர்.சி.பி. முதலில் பேட்டிங் செய்து வருகிறது. அந்த அணியின் அதிரடி பேட்ஸ்மேன் டிம் டேவிட் லுங்கி நிகிடி வீசிய 12-வ ஓவரின் 2-வது பந்தை சிக்சருக்கு தூக்கினார். இந்த சிக்சர் மூலம் 560 பந்தில் ஐபிஎல் கிரிக்கெட்டில் 1000 ரன்களை கடந்தார்.
இதன் மூலம் 1000 ரன்களை மிகக் குறைவான பந்துகளில் கடந்த 2-வது வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். முன்னதாக அந்த்ரே ரஸல் 545 பந்தில் 1000 ரன்களை கடந்து முதலிடத்தில் உள்ளார். டிராவிஸ் ஹெட் 575 பந்துகளில் கடந்து 3-வது இடத்திலும், பில் சாட் 575 பந்துகளில் கடந்து 4-வது இடத்திலும், கிளாசன் 594 பந்துகளில் கடந்து 5-வது இடத்திலும், சேவாக் 604 பந்துகளில் கடந்து 6-வது இடத்திலும் உள்ளனர்.