எம்.எஸ். தோனியின் 5 கோப்பையை சமன் செய்வதுதான் சாதனை: இதைத்தான் விரும்புகிறேன்- கே.எல். ராகுல்

எம்.எஸ். தோனியைின் 5 டிராபிகளை வென்ற சாதனையை சமன் செய்வதுதான் எனக்கு உண்மையான மகிழ்ச்சி என்று கே.எல். ராகுல் தெரிவித்துள்ளார்.
எம்.எஸ். தோனியின் 5 கோப்பையை சமன் செய்வதுதான் சாதனை: இதைத்தான் விரும்புகிறேன்- கே.எல். ராகுல்
Published on

ஐ.பி.எல். 2026 சீசன் கிரிக்கெட் நடைபெற்று வருகிறது. டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக விளையாடி வரும் கே.எல். ராகுல், ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் எம்.எஸ். தோனியை முந்தியுள்ளார். இது தொடர்பாக கே.எல். ராகுல் கூறியதாவது:-

நான் எம்.எஸ். தோனி அடித்த ரன்களை கடந்து விட்டதாக உணரவில்லை. தனிப்பட்ட சாதனை சிறந்ததுதான். நான் சரியான டிராக்கில் சென்று கொண்டிருப்பதாக அவர்கள் எனக்கு உறுதி அளிக்கிறார்கள். ஆனால், எம்.எஸ். தோனியை போன்று பல டிராபிகளை வென்றால்தான், அது எனக்கு உண்மையான மகிழ்ச்சியை கொடுக்கும்.

கிரிக்கெட் என்பது டீம் ஸ்போர்ட். நீங்கள் டிராபியை வெல்லதைத்தான் விரும்புவீர்கள். வெற்றி பெற்ற அணியில் இருப்பதை விரும்புவீர்கள். இதுதான் எப்போதுமே என்னுடைய இலக்கு.

இவ்வாறு கே.எல். ராகுல் தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com