

ராமநாதபுரம்:
1996-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. சார்பில் இங்கு ரகுமான்கான் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தொடர்ந்து 2001-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ரகுமான்கான் தோல்வி அடைந்தார்.
அதன் பின்னர் நடந்த அனைத்து தேர்தல்களிலும் ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி தி.மு.க. தலைமையிலான கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டது.
இந்த நிலையில் 20 ஆண்டுகளுக்கு பிறகு 2021 தேர்தல் களத்தில் ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் களம் இறங்குகிறார். இதன் காரணமாக தி.மு.க. தொண்டர்கள், நிர்வாகிகள் மத்தியில் மகிழ்ச்சியை காண முடிகிறது.