

ஐ.பி.எல். 2026-ன் 45-வது லீக் போட்டி ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்- கொல்கத்தா நைட் ரைட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. டாஸ் வென்ற ஐதராபாத் பேட்டிங் தேர்வு செய்தது.
அபிஷேக் சர்மா 15 ரன்களில் ஆட்டமிழந்தாலும், டிராவிஸ் ஹெட் அதிரடியாக விளையாடி 28 பந்தில் 9 பவுண்டரி, 3 சிக்சருடன் 61 ரன்கள் விளாசினார்.
அதன்பின் வந்த இஷான் கிஷனை தவிர மற்ற வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். 16-வது ஓவரை சுனில் நரைன் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் சலில் அரோரா க்ளீன் போல்டானார். இது அவரின் 200-வது ஐபிஎல் விக்கெட் ஆகும். இதன் மூலம் 200 விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர்கள் சாதனைப் பட்டியலில் சுனில் நரைன் இடம் பிடித்தார். இத்துடன் ஒரே அணிக்காக 200 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
மேலும், 200 விக்கெட்டுகள் வீழ்த்தி 3-வது வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். சாஹல், புவி இதற்கு முன்னதாக 200 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளனர்.