அதிரடி அரைசதத்துடன் மீண்டும் ஒருமுறை ஆர்சிபி-ஐ நோகடித்த சுனில் நரைன்

17 பந்தில் அரைசதம் அடித்து மீண்டும் ஒருமுறை கொல்கத்தா ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை வீழ்த்த முக்கிய காரணமாக இருந்தார் சுனில் நரைன். #IPL2018 #KKR
அதிரடி அரைசதத்துடன் மீண்டும் ஒருமுறை ஆர்சிபி-ஐ நோகடித்த சுனில் நரைன்
Published on

தொடக்க வீரராக சுழற்பந்து வீச்சாளர் சுனில் நரைன் களம் இறங்கினார். கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரின்போது கொல்கத்தாவில் நடைபெற்ற ஆட்டத்தில் 15 பந்தில் அரைசதம் அடித்து ஆர்சிபி அணியை துவம்சம் செய்ய முக்கிய காரணமாக இருந்தார்.

தற்போதும் ஆர்சிபிக்கு எதிராக சுனில் நரைன் சிறப்பாக விளையாடினார். அவர் 17 பந்தில் அரைசதம் அடித்தார். ஆர்சிபி என்றாலே சுனில் நரைனுக்கு கொண்டாட்டம்தான். அப்படிதான் அந்த அணிக்கு எதிராக விளையாடி வருகிறார். இவரது அரைசதத்தால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 18.5 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் எடுத்து நான்கு விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நேற்று நடைபெற்ற டெல்லிக்கு எதிரான போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி தொடக்க வீரர் லோகேஷ் ராகுல் 14 பந்தில் அரைசதம் அடித்து ஐபிஎல் தொடரில் அதிவேக அரைசதத்தை பதிவு செய்தார். சுனில் நரைன் ஆர்சிபிக்கு எதிராக கடந்த வருடம் 15 பந்தில் அதிவேக அரைசதம் அடித்திருந்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com