

ஐ.பி.எல். கிரிக்கெட் விளையாடுவதற்கு விருப்பம் உள்ள வீரர்கள் விண்ணப்பம் செய்வார்கள். அதன்டிப்படையில் ஏலத்தின்போது வீரர்களை ஒவ்வொரு அணியும் ஏலம் எடுக்கும்.
ஐ.பி.எல். தொடர் தொடங்கும்போது, விளையாடிக் கொண்டிருக்கும்போது சில வீரர்கள் தனிப்பட்ட காரணத்திற்காக தொடரில் இருந்து வெளியேறுவதாக கூறி சொந்த நாடு திரும்பி விடுவார்கள். இது அந்த அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தும். மாற்று வீரரை தேர்வு செய்ய வேண்டிய நிலை ஏற்படும்.
இதனால் ஒரு வீரர் காயம் இல்லாமல் தனிப்பட்ட விசயத்திற்காக, அணியில் இருந்து விலகினால் இரண்டு வருடங்கள் ஐ.பி.எல். தொடரில் விளையாட முடியாது என்று பிசிசிஐ விதி அறிமுகப்படுத்தியுள்ளது.
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் இடம் பிடித்திருந்த பென் டக்கெட், ஐபிஎல் 2026 சீசன் தொடங்குவதற்கு முன்னதாக சொந்த காரணத்திற்கான விலகினார். இதனால் அவர் 2 சீசன் விளையாட முடியாத நிலை ஏற்பட்டது. இவரை டெல்லி கேப்பிட்டல்ஸ் அடிப்படை விலையான 2 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்திருந்தது.
இதற்கு முன்னதாக இதுபோது ஹாரி ப்ரூக் கடந்த ஆண்டு டெல்லியில் இருந்து விலகினார். இந்த நிலையில் இரண்டு ஆண்டு தடை என்ற விதி குறித்து மறுயோசனை செய்ய வேண்டும் என்று கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
பென் டக்கெட் ஆஷஸ் தொடரில் சிறப்பாக விளையாடினார். The Hundred தொடருக்கான ஏலத்தில் நல்ல விலைக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். அவ்வாறு எடுக்கவில்லை என்றால், வேறுமாதிரி இருந்திருக்கலாம். அவர் ஐபிஎல் தொடரை தவற விடுவதற்கும், டெஸ்ட் அணியில் கவனம் செலுத்தப் போவதாக கூறப்படுவதனாலும் மகிழ்ச்சியாகவே இருந்திருப்பார். ஏனென்றால் தி ஹன்ட்ரெட் தொடரில் விளையாடுவதற்கான நல்ல பணம் கிடைக்கிறது.
இரண்டு ஆண்டுத் தடை என்பது எவ்விதப் பலனையும் அளிக்கவில்லை என்பதை கண்கூடாக பார்க்கிறோம். உண்மையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு நடவடிக்கையைத்தான் நாம் பரிசீலிக்க வேண்டும். தடையானது சம்பந்தப்பட்ட வீரரின் மீதோ அல்லது அவர் மீண்டும் IPL-க்குத் திரும்பும் வாய்ப்புகளின் மீதோ எவ்விதத் தாக்கத்தையும் ஏற்படுத்தாத வரையில், அது ஒருபோதும் பயன்தராது என்று கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.