IPL 2026 | ஆர்சிபி போட்டியை நேரில் காணும் ஸ்மிருதி மந்தனா - ஷ்ரேயங்கா பாட்டில்

பெங்களூரு மற்றும் ஐதராபாத் அணியின் போட்டியை மகளிர் ஆர்சிபி அணியின் கேப்டன் ஸ்மிருந்தி மந்தனா மற்றும் ஷ்ரேயங்கா பாட்டில் ஆகியோர் நேரில் கண்டு ரசித்து வருகின்றனர்.
IPL 2026 | ஆர்சிபி போட்டியை நேரில் காணும் ஸ்மிருதி மந்தனா - ஷ்ரேயங்கா பாட்டில்
Published on

19-வது ஐ.பி.எல். கிரிக்கெட்திருவிழா இன்று தொடங்கி மே 31-ந்தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது. பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் அரங்கேறும் தொடக்க ஆட்டத்தில் பெங்களூரு அணி, முன்னாள் சாம்பியன் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணியுடன் மோதி வருகிறது.

இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் ரஜத் படிதார் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி ஐதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

இந்நிலையில் இந்த போட்டியை காண விராட் கோலியின் மனைவியும் நடிகையுமான அனுஷ்கா சர்மா வருகை தந்துள்ளார். அவருடன் மகளிர் ஆர்சிபி அணியின் கேப்டன் ஸ்மிருதி மந்தனா மற்றும் ஷ்ரேயங்கா பாட்டில் ஆகியோர் போட்டியை கண்டு ரசித்து வருகின்றனர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com