

இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக சுப்மன் கில் உள்ளார். டி20-க்கான அணியின் துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டார். இதற்கு எதிராக கடும் விமர்சனம் எழுந்தது. மேலும், இவரால் அதிரடியாக விளையாட முடியவில்லை. ரன்களும் குவிக்க இயலவில்லை. இதனால் டி20 உலகக் கோப்பைக்கான அணியில் இருந்து நீக்கப்பட்டார்.
தற்போது, குஜராத் அணி கேப்டனாகவும், தொடக்க வீரராகவும் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் களம் இறங்க உள்ளார். இந்த நிலையில் சுப்மன் கில் கூறுகையில் "நீங்கள் கடந்த மூன்று நான்கள் சீசன்களில் பார்த்தீர்கள் என்றால், நான் ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்துள்ளேன். ஆகவே, இந்த சீசனில் நான் எதையும் நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக நினைக்வில்லை" எனத் தெரிவித்துள்ளார்.
டி20 உலகக் கோப்பைக்கான அணியில் இடம் மறுக்கப்பட்டாலும், குஜராத் டைட்டன்ஸ் அணி கேப்டனாக சற்றும் கலங்காமல் தன்னம்பிக்கையுடன் களம் காண உள்ளார். குஜராத் டைட்டன்ஸ் தனது முதல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வருகிற செவ்வாய்க்கிழமை எதிர்கொள்கிறது.