குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயருக்கு அபராதம்

இந்தப்போட்டியில் பந்து வீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதாக பஞ்சாப் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயருக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயருக்கு அபராதம்
Published on

சண்டிகர்:

10 அணிகள் பங்கேற்றுள்ள 19-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த 28-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 4-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின.

நியூ சண்டிகரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பஞ்சாப் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, பேட்டிங் ஆடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்தது. பஞ்சாப் தரப்பில் அந்த அணியின் விஜய்குமார் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதையடுத்து 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சவாலான இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணி 19.1 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன் மூலம் குஜராத் டைட்டன்சை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் கடைசி ஓவரில் திரில் வெற்றிபெற்றது. குஜராத் தரப்பில் அந்த அணியின் பிரசாந்த் கிஷோர் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பரபரப்பாக நடைபெற்ற இந்தப்போட்டியில் பந்து வீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதாக பஞ்சாப் அணிக்கு எதிராக புகார் எழுந்தது. இதையடுத்து, அந்த அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயருக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com