

10 அணிகள் இடையிலான 19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நக ரங்களில் நடந்து வருகிறது. இந்நிலையில், இந்த தொடரில் விளையாடிய 3 போட்டிகளிலும் சென்னை அணி தோல்வியடைந்துள்ளது. இதனால் சென்னை அணி மீது கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளது. வரும் 11ம் டெல்லி அணிக்கு எதிராக சென்னை அணி விளையாட உள்ளது.
இந்த நிலையில் சென்னை அணி வீரர் ஷிவம் துபே கூறியதாவது:-
ஆமா.. நாங்க மூனு மேட்ச் தோத்துட்டோம்தான்.. ஆனா இதுக்கு முன்னாடி வரிசையா மூனு மேட்ச் மேல ஜெயிச்சிருக்கோம். மறந்துடாதீங்க. அத துரதிருஷ்டவசமா இப்ப தோத்துட்டோம். நாங்க மீண்டும் எழுந்திருச்சி வருவோம். அப்படியொரு டீம ஏப்ரல் 11 அன்னைக்கு நீங்க விரைவில் எல்லாரும் பாப்பீங்க என துபே கூறினார்.