IPL 2026 | ஆரஞ்சு கேப் பட்டியல்: முதலிடம் பிடித்தார் சாய் சுதர்சன்

குஜராத் அணி புள்ளிப்பட்டியலில் 2-வது இடத்தில் நீடிக்கிறது.
IPL 2026 | ஆரஞ்சு கேப் பட்டியல்: முதலிடம் பிடித்தார் சாய் சுதர்சன்
Published on

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இதுவரை 60 போட்டிகள் நிறைவடைந்துள்ளன.

நேற்று கொல்கத்தாவில் நடைபெற்ற 60-வது லீக் போட்டியில் கொல்கத்தா, குஜராத் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற குஜராத் அணி பவுலிங் தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் ஆடிய கொல்கத்தா அணி 247 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய குஜராத் 218 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் கொல்கத்தா அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி எற்றது.

குஜராத் சார்பில் சுப்மன் கில் 83 ரன்னும், ஜோஸ் பட்லர் 57 ரன்னும், சாய் சுதர்சன் 53 ரன்னும் எடுத்தனர்.

இந்நிலையில், சாய் சுதர்சன் ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் குவித்து ஆரஞ்சு தொப்பியை கைப்பற்றி உள்ளார். இவர் 13 ஆட்டங்களில் 554 ரன்களைக் கடந்து முதலிடத்தில் உள்ளார்.

இரண்டாவது இடத்தில் குஜராத் அணியின் சுப்மன் கில் 552 ரன்னும், 3வது இடத்தில் ஐதராபாத்தின் ஹென்ரிச் கிளாசன் 508 ரன்னும் குவித்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com