ஐ.பி.எல். 2025: தெண்டுல்கர் சாதனையை முறியடித்த சாய் சுதர்சன்

முதலில் ஆடிய குஜராத் அணி 20 ஓவரில் 224 ரன்கள் குவித்தது.தொடர்ந்து ஆடிய ஐதராபாத் 186 ரன்களை மட்டுமே எடுத்தது.
ஐ.பி.எல். 2025: தெண்டுல்கர் சாதனையை முறியடித்த சாய் சுதர்சன்
Published on

அகமதாபாத்:

அகமதாபாத்தில் நேற்று நடந்த 51வது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ், சன்ரைசர்ஸ் அகமதாபாத் அணிகள் மோதின. முதலில் ஆடிய குஜராத் அணி 20 ஓவரில் 224 ரன்கள் குவித்தது.

தொடர்ந்து ஆடிய ஐதராபாத் 186 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 38 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் வெற்றி பெற்றதுடன், புள்ளிப்பட்டியலில் 2-வது இடத்தையும் பிடித்தது.

இதற்கிடையே, அதிக ரன் குவிப்புக்காக வழங்கப்படும் ஆரஞ்சு நிற தொப்பி மீண்டும் குஜராத் வீரரான சாய் சுதர்சன் வசமானது.

இந்த ஆட்டத்தில் 48 ரன் எடுத்த சாய் சுதர்சனின் ரன் எண்ணிக்கை 504-ஆக உயர்ந்தது. அவர் மும்பை வீரர் சூர்யகுமார் யாதவிடம் இருந்து (475 ரன்) ஆரஞ்சு தொப்பியை தட்டிப் பறித்துள்ளார்.

இந்நிலையில், ஒட்டுமொத்த டி20 கிரிக்கெட்டில் தமிழகத்தைச் சேர்ந்த சாய் சுதர்சன் நேற்று 54 இன்னிங்சில் 2,000 ரன்களைக் கடந்தார். ஆஸ்திரேலியாவின் ஷான் மார்சுக்குப் பிறகு இந்த மைல்கல்லை அதிவேகமாக எட்டிய வீரராக சாய் சுதர்சன் திகழ்கிறார்.

இந்திய வீரர்களில் இதற்கு முன் சச்சின் தெண்டுல்கர் 59 இன்னிங்சில் 2,000 ரன்களைக் கடந்ததே அதிவேகமாக இருந்தது. அதனை சாய் சுதர்சன் முறியடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்க்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com