CSKvLSG: கருப்புப் பட்டை அணிந்து விளையாடிய வீரர்கள் - காரணம் இதுதான்

டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
CSKvLSG: கருப்புப் பட்டை அணிந்து விளையாடிய வீரர்கள் - காரணம் இதுதான்
Published on

ஐபிஎல் தொடரின் 59வது போட்டி லக்னோவில் நடைபெற்று வருகிறது. இதில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதி வருகின்றன. டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

இந்நிலையில், போட்டியின் போது சிஎஸ்கே மற்றும் லக்னோ அணி வீரர்கள் கருப்புப் பட்டை அணிந்து களமிறங்கினர்.

இரு அணி வீரர்களும் கையில் கருப்புப் பட்டை அணிந்து மைதானத்திற்குள் நுழைந்தனர். இதற்கு காரணம் உத்தர பிரதேசத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக 100க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

இந்தப் பேரிடரில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இரு அணி வீரர்களும் கருப்பு பட்டை அணிந்து விளையாடி வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com