

நடப்பு ஐபிஎல் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் 3 லீக் போட்டிகள் மட்டுமே நடக்கவுள்ளன. இதையடுத்து பிளே ஆப் சுற்று ஆட்டங்கள் நடைபெறும்.
ஐ.பி.எல். டி20 தொடரில் நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, குஜராத் டைட்டன்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் ஆகிய 3 அணிகளும் 9 வெற்றி, 5 தோல்வியுடன் 18 புள்ளிகள் பெற்றுள்ளன.
ரன் ரேட் அடிப்படையில் பெங்களூரு முதல் இடத்தையும், குஜராத் 2-வது இடத்தையும், ஐதராபாத் 3-வது இடத்தையும் பிடித்துள்ளன.
இந்நிலையில், தர்மசாலாவில் வரும் 26-ம் தேதி நடைபெறும் குவாலிபையர்-1 ஆட்டத்தில் பெங்களூரு - குஜராத் அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.
நியூ சண்டிகரில் வரும் 27-ம் தேதி நடக்கும் எலிமினேட்டர் போட்டியில் ஐதராபாத்தும், 4-வது இடத்தைப் பிடிக்கும் அணியும் மோத உள்ளன. இதில் தோற்கும் அணி வெளியேற்றப்படும்.
நியூ சண்டிகரில் வரும் 29-ம் தேதி நடைபெறும் குவாலிபையர்-2 போட்டியில் குவாலிபையர்-1 ஆட்டத்தில் தோல்வி அடையும் அணியும், எலிமினேட்டரில் வெல்லும் அணியும் மோதும். இதில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும். இறுதி ஆட்டம் வரும் 31-ம் தேதி அகமதாபாத்தில் நடைபெறுகிறது.