டி20 கிரிக்கெட்டில் 200 விக்கெட் எடுத்த இளவயது வீரர்: ரவி பிஷ்னோய் சாதனை

6 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி திரில் வெற்றி பெற்றது.
ரவி பிஷ்னோய்
ரவி பிஷ்னோய்
Published on

அகமதாபாத்தில் நேற்று நடந்த 9வது லீக் ஆட்டத்தில் குஜராத் ஜெயண்ட்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இதில் முதலில் ஆடிய ராஜஸ்தான் அணி 210 ரன்களைக் குவித்தது.

தொடர்ந்து ஆடிய குஜராத் அணி 204 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 6 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி திரில் வெற்றி பெற்றது.

இதில் ராஜஸ்தான் சார்பில் சிறப்பாக பந்துவீசிய ரவி பிஷ்னோய் 41 ரன்கள் கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தினார்.

இந்நிலையில், இளம் வயதில் 200 டி20 விக்கெட்டுகளை பெற்ற இந்திய வீரர் ஆனார் பிஷ்னோய். இவர் 25 வயது 211 நாட்களில் இந்த சாதனையை எட்டிப் படைத்தார்.

இந்தப் பட்டியலில் ரஷீத் கான் (23 வயது 119 நாட்கள்) தான் முதலிடத்தில் உள்ளார்.

பிஷ்னோய் இதுவரை 170 டி20 போட்டிகளில் 200 விக்கெட்டுகளை பெற்றுள்ளார். ஐபிஎல் தொடரில் 79 போட்டிகளில் 77 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com