ஐபிஎல் 2018- தொடக்க விழா கலைநிகழ்ச்சியில் ரன்வீர் பங்கேற்கவில்லை

ஐபிஎல் 2018 தொடக்க விழா கலைநிகழ்ச்சியில் பாலிவுட் நடிகர் பங்கேற்பதாக இருந்தது. காயம் காரணமாக தற்போது அவர் விலகியுள்ளார். #IPL2018
ஐபிஎல் 2018- தொடக்க விழா கலைநிகழ்ச்சியில் ரன்வீர் பங்கேற்கவில்லை
Published on

இதில் பாலிவுட் நடிகர் ரன்வீர் கலந்து கொண்டு நடனமாடுவதாக இருந்தது. ஆனால் கால்பந்து போட்டியில் விளையாடியபோது அவரது தோள்பட்டையில் எதிர்பாராத விதமாக காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் தொடக்க விழா கலைநிகழ்ச்சியில் கலந்து கொள்ளமாட்டார் என்று அவரது செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.

இதுகுறித்து ரன்வீர் கூறுகையில் ‘‘பல்வேறு மருத்துவ பரிசோதனை செய்த பிறகு, இந்த வருட ஐபிஎல் தொடக்க விழாவில் பங்கேற்கக்கூடாது என்று டாக்டர்கள் அழுத்தமாக கூறிவிட்டார்கள். தோள்பட்டைக்கு அதிக அளவில் வேலை கொடுத்தால், காயத்தின் வீரியம் அதிகமாகிவிடும்’’ என்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com