IPL 2026 | பர்பிள் கேப்பை புவனேஷ்குமாருடன் பகிர்ந்து கொண்ட ரபாடா

முதலில் ஆடிய குஜராத் அணி 20 ஓவரில் 168 ரன்கள் எடுத்தது.
IPL 2026 | பர்பிள் கேப்பை புவனேஷ்குமாருடன் பகிர்ந்து கொண்ட ரபாடா
Published on

நடப்பு ஐபிஎல் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. அணிகளுக்கு இடையிலான மோதல் ஒருபுறம் இருக்க, வீரர்களுக்கு இடையிலான தனிப்பட்ட சாதனைகளுக்கான போட்டி ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

நேற்று நடைபெற்ற ஐபிஎல் ஆட்டத்தில் முதலில் ஆடிய குஜராத் அணி 20 ஓவரில் 168 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய ஐதரபாத் அணி 86 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

குஜராத் அணி சார்பில் ரபாடா, ஜேசன் ஹோல்டர் தலா 3 விக்கெட்டும், பிரசித் கிருஷ்ணா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இந்நிலையில், அதிக விக்கெட் வீழ்த்தியோருக்கான பர்பிள் கேப் பட்டியலில் ஆர்.சி.பி.யின் புவனேஷ்வர் குமாருடன் குஜராத் அணியின் ரபாடா இணைந்துள்ளார்.

ஐதராபாத் அணிக்கு எதிராக அவர் எடுத்த 3 விக்கெட்டுகளுடன், ரபாடா 12 போட்டிகளில் 21 விக்கெட்டுகளுடன் முதல் இடத்தைப் பகிர்ந்துள்ளார்.

புவனேஷ்வர் குமார் 11 போட்டிகளில் 21 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com