ஜிம்பாப்வே வீரர் முசராபானி 2 ஆண்டு விளையாட தடை: காரணம் இதுதான்

ஐ.பி.எல். தொடரில் பல்வேறு வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.
ஜிம்பாப்வே வீரர் முசராபானி 2 ஆண்டு விளையாட தடை: காரணம் இதுதான்
Published on

ஐ.பி.எல். தொடரின் 19வது சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பல்வேறு வெளிநாட்டு வீரர்கள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர்.

இதற்கிடையே, கொல்கத்தா அணியில் விளையாட இருந்த வங்கதேச வீரர் முஸ்தபிசூர் ரகுமானின் ஒப்பந்தம் பல்வேறு தரப்பு எதிர்ப்பால் ரத்து செய்யப்பட்டது. இவருக்கு மாற்றாக சேர்க்கப்பட்ட ஜிம்பாப்வே வேகப்பந்து வீச்சாளர் பிளெஸ்சிங் முசராபானி, தற்போது கொல்கத்தா அணியில் விளையாடி வருகிறார்.

ஐபிஎல் தொடருக்கு முன், பிஎஸ்எல்லில் இஸ்லாமாபாத் யுனைடெட் அணியால் மாற்று வீரராக ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவதற்காக கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி தன்னை அணுகியதால், முசராபானி யுனைடெட் அணியுடனான தனது ஒப்பந்தத்தைக் கைவிட்டார். இதனால் தற்போது அவருக்கு 2 ஆண்டு விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com