அறிமுக போட்டியிலேயே 4 விக்கெட்: சாதனை பட்டியலில் இணைந்த பிரபுல் ஹிங்கே, சகிப் ஹுசைன் | IPL 2026

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிராக தலா 4 விக்கெட்டுகள் வீழ்த்தி அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தனர்.
அறிமுக போட்டியிலேயே 4 விக்கெட்: சாதனை பட்டியலில் இணைந்த பிரபுல் ஹிங்கே, சகிப் ஹுசைன் | IPL 2026
Published on

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின போட்டி நேற்று ஐதராபாத்தில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஐதராபாத் 216 ரன்கள் குவித்தது. பின்னர் 217 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 159 ரன்களில் ஆல்அவுட் ஆகி 57 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் அறிமுக பவுலர்களான பிரபுல் ஹிங்கே, சாகிப் ஹுசைன் அபாரமாக பந்து வீசி தலா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இதன் மூலம் அறிமுக போட்டியிலேயே 4 விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய பந்து வீச்சாளர்கள் சாதனையில் இடம் பிடித்துள்ளனர்.

சி.எஸ்.கே. அணிக்காக விளையாடிய ஷதாப் ஜகாதி 2009-ல் டெல்லிக்கு எதிராக அணிக்கெதிராக 24 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தினார்.

அஷ்வினி குமார் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கெதிராக 2025-ல் 24 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகள் சாய்த்தார்.

நேற்றைய போட்டியில் சாகிப் ஹுசைன் 24 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகள் சாய்த்தார்.

பஞ்சாப் அணிக்காக பால் வல்தாட்டி 2011-ல் டெக்கான் சார்சர்ஸ் அணிக்கெதிராக 29 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

நேற்றைய போட்டியில் பிரபுல் ஹிங்கே 34 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தினார்.

இந்த வீரர்கள் அனைவரும் இந்திய அணிக்காக விளையாடுவதற்கு முன்னதாகவே இந்த சாதனையை படைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com