IPL 2026 | இறுதிப்போட்டிக்கான இடத்தை மாற்றிய பிசிசிஐ

இறுதிப்போட்டியை பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடத்த பிசிசிஐ திட்டமிட்டிருந்தது.
IPL 2026 | இறுதிப்போட்டிக்கான இடத்தை மாற்றிய பிசிசிஐ
Published on

2026 ஐபிஎல் தொடரின் பிளே ஆப் மற்றும் இறுதிப் போட்டிகளுக்கான கால அட்டவணையை பிசிசிஐ இன்று அறிவித்தது.

ஐபிஎல் தொடரின் 4 பிளே ஆப் போட்டிகள் மே மாத இறுதியில் நடைபெறவுள்ளன.

மே 26 அன்று தர்மசாலாவில் குவாலிபையர் 1 போட்டி நடைபெறும். புள்ளிப்பட்டியலில் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் பலப்பரீட்சை நடத்தும்.

மே 27 அன்று எலிமினேட்டர் போட்டியும், மே 29 அன்று குவாலிபையர் 2 போட்டியும் சண்டிகரில் நடைபெறவுள்ளன.

ஐ.பி.எல். இறுதிப்போட்டி மே 31 அன்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, இறுதிப்போட்டியை பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடத்த பிசிசிஐ திட்டமிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com