IPL 2026 | பஞ்சாப் வெற்றிபெற 220 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ஐதராபாத்

பவர்பிளேயில் ஐதராபாத் அணி 100 ரன்களைக் கடந்தது.
IPL 2026 | பஞ்சாப் வெற்றிபெற 220 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ஐதராபாத்
Published on

நடப்பு ஐ.பி.எல். தொடரின் 17-வது லீக் போட்டி நியூ சண்டிகரில் நடைபெறுகிறது. இதில் பஞ்சாப் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. டாஸ் வென்ற பஞ்சாப் அணி பவுலிங் தேர்வு செய்தது.

அதன்படி, ஐதரபாத் அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக அபிஷேக் சர்மா, டிராவிஸ் ஹெட் களமிறங்கினர்.

இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். குறிப்பாக அபிஷேக் சர்மா 18 பந்தில் அரை சதம் கடந்தார். பவர்பிளே முடிவில் பஞ்சாப் அணி 100 ரன்களைக் கடந்தது.

முதல் விக்கெட்டுக்கு 120 ரன்கள் சேர்த்த நிலையில் டிராவிஸ் ஹெட் 38 ரன்னில் அவுட்டானார். அவரை தொடர்ந்து சிறப்பாக ஆடிய அபிஷேக் சர்மா 74 ரன்னில் ஆட்டமிழந்தார். இஷான் கிஷன் 27 ரன்னில் வெளியேறினார். அனிகேட் வர்மா 18 ரன்னும், சலீல் அரோரா 9 ரன்னும் எடுத்தனர். கிளாசன் 39 ரன்னில் அவுட்டானார்.

இறுதியில், ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 219 ரன்கள் குவித்தது.

பஞ்சாப் கிங்ஸ் சார்பில் ஷஷாங்க் சிங், அர்ஷ்தீப் சிங் தலா 2 விக்கெட்டும், பார்ல்ட்லெட் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, 220 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்குகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com