இங்கிலாந்து டெஸ்ட் தொடர்: கேகேஆர் அணியிலிருந்து வெளியேறினார் ரச்சின் ரவீந்திரா

ஐபிஎல் தொடரில் ரச்சின் ரவீந்திரா ஒரு போட்டியில்கூட விளையாடவில்லை.
இங்கிலாந்து டெஸ்ட் தொடர்: கேகேஆர் அணியிலிருந்து வெளியேறினார் ரச்சின் ரவீந்திரா
Published on

நடப்பு ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 11 ஆட்டங்களில் 4 வெற்றி, 6 தோல்வி என 9 புள்ளிகளுடன் 8வது இடத்தில் உள்ளது.

இந்நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் வகையில் நியூசிலாந்து அணியின் ஆல் ரவுண்டரான ரச்சின் ரவீந்திரா நாடு திரும்பியுள்ளார் என கொல்கத்தா அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அடுத்த மாதம் நியூசிலாந்து அணி இங்கிலாந்துக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இந்தத் தொடருக்கு தயாராகும் வகையில் ரச்சின் ரவீந்திரா நாடு திரும்பியுள்ளார்.

ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் நியூசிலாந்து அணி 2வது இடத்தில் நீடிக்கிறது.

நடப்பு ஐபிஎல் தொடரில் ரச்சின் ரவீந்திரா ஒரு போட்டியில்கூட விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com