ஐபிஎல் வரலாற்றில் முதல் அணியாக சாதனை படைத்த மும்பை இந்தியன்ஸ்

ஒரு குறிப்பிட்ட எதிரணிக்கு எதிராக அதிக வெற்றிகளைக் குவித்த முதல் ஐபிஎல் அணி என்ற பெருமையை மும்பை பெற்றுள்ளது.
ஐபிஎல் வரலாற்றில் முதல் அணியாக சாதனை படைத்த மும்பை இந்தியன்ஸ்
Published on

ஐபிஎல் 2026 தொடரின் இரண்டாவது ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் கேகேஆர் நிர்ணயித்த 221 ரன்கள் என்ற கடினமான இலக்கை, 19.1 ஓவர்களிலேயே எட்டி (224/4) மும்பை அபார வெற்றி பெற்றது. இது ஐபிஎல் வரலாற்றில் மும்பை அணியின் அதிகபட்ச வெற்றிகரமான ரன் சேஸிங் ஆகும்.

தொடக்க வீரர்களான ரோகித் சர்மா (38 பந்துகளில் 78 ரன்கள்) மற்றும் ரியான் ரிக்கெல்டன் (43 பந்துகளில் 81 ரன்கள்) ஆகியோரின் அதிரடி அரைசதங்கள் இந்த வெற்றிக்கு அடித்தளமிட்டன.

இந்த வெற்றியின் மூலம், மும்பை இந்தியன்ஸ் அணி கிரிக்கெட் வரலாற்றில் ஒரு புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. ஒரு குறிப்பிட்ட எதிரணிக்கு எதிராக 25 வெற்றிகளைக் குவித்த முதல் ஐபிஎல் அணி என்ற பெருமையை மும்பை பெற்றுள்ளது. இதற்கு அடுத்தப்படியாக சென்னை, டெல்லி அணியை 21 முறை மும்பை அணி வீழ்த்தி அதற்கு அடுத்த இடத்தில் உள்ளது.

மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இதுவரை 36 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் மும்பை அணி 25 வெற்றிகளை பெற்றுள்ளது. கொல்கத்தா அணி வெறும் 11 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

மேலும் மும்பை வான்கடே மைதானத்தில் கேகேஆர் அணிக்கு எதிராக விளையாடிய 13 போட்டிகளில் 11-ல் மும்பை வெற்றி பெற்றுள்ளது. இது ஒரு குறிப்பிட்ட மைதானத்தில் ஒரு அணிக்கு எதிராகப் பெறப்பட்ட அதிகபட்ச வெற்றியாகும்.

2012-ஆம் ஆண்டிற்குப் பிறகு, கடந்த 14 ஆண்டுகளாகத் தனது முதல் லீக் போட்டியில் வெற்றி பெற முடியாமல் தவித்து வந்த மும்பை இந்தியன்ஸ், இந்த வரலாற்று வெற்றியின் மூலம் அந்த மோசமான சாதனைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com