

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இதுவரை 41 போட்டிகள் நிறைவடைந்துள்ளன. நேற்று நடந்த 41-லீக் போட்டியில் மும்பை, ஐதராபாத் அணிகள் மோதின. இதில் ஐதராபாத் அணி அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில், நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் எடுத்து ஆரஞ்சு தொப்பியை ஐதராபாத் அணியின் அபிஷேக் சர்மா கைப்பற்றி உள்ளார். இவர் இதுவரை 425 ரன்கள் குவித்து முதலிடத்தில் உள்ளார்.
இரண்டாவது இடத்தில் ஹென்ரிச் கிளாசன் 414 ரன்னும், மூன்றாவது இடத்தில் வைபவ் சூர்யவன்ஷி 400 ரன்னும் குவித்துள்ளனர்.
இதேபோல், அதிக விக்கெட்களை வீழ்த்தி பர்பிள் தொப்பியை ஐதராபாத் அணியின் ஈஷான் மலிங்கா கைப்பற்றி உள்ளார். இவர் மொத்தம் 15 விக்கெட் எடுத்து முதலிடத்தில் உள்ளார்.
இரண்டாவது இடத்தில் ஆர்சிபியின் புவனேஷ்வர் குமார் 14 விக்கெட்டும், மூன்றாவது இடத்தில் ராஜஸ்தானின் ஜோப்ரா ஆர்ச்சர் 14 விக்கெட்டும் வீழ்த்தி உள்ளனர்.
ஆரஞ்சு கேப் மற்றும் பர்பிள் கேப் பட்டியலில் ஆதிக்கம் செலுத்தி வரும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தில் நீடிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.