கேட்ச் பிடிக்க பாய்ந்து தலையில் பலத்த அடி: மைதானத்தில் மயங்கிய Lungi Ngidi

265 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் பஞ்சாப் களமிறங்கியது.
கேட்ச் பிடிக்க பாய்ந்து தலையில் பலத்த அடி: மைதானத்தில் மயங்கிய Lungi Ngidi
Published on

ஐபிஎல் தொடரின் 35வது லீக் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின.

இதில் முதலில் ஆடிய டெல்லி அணி கே.எல்.ராகுல், நிதிஷ் ரானா அதிரடியால் 264 ரன்களைக் குவித்தது.

இதையடுத்து, 265 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் பஞ்சாப் களமிறங்கியது.

இந்நிலையில், பஞ்சாப் அணியின் 3வது ஓவரில் டெல்லி வீரர் லுங்கி நிகிடி கேட்ச் பிடிக்க பின்னோக்கி ஓடினார். அப்போது நிலைதடுமாறி கீழே விழுந்த அவரது தலை அல்லது கழுத்துப் பகுதி தரையில் பலமாக மோதியதாகத் தெரிகிறது. இதனால் மைதானத்திலேயே அவர் வலியால் துடித்தார்.

இதையடுத்து, மைதானத்திற்குள் விரைந்து வந்த ஆம்புலன்ஸ் அவரை ஸ்டெச்சர் மூலமாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றது.

அவர் அருகில் உள்ள உள்ளூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு ஸ்கேன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com