

ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ஆர்சிபி (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு) ஆகிய இரண்டு அணிகள் விற்பனை செய்யப்பட்டதாக கடந்த மார்ச் மாதம் செய்தி வெளியானது. இரண்டு அணிகளும் தலா 15 ஆயிரம் கோடிக்கு அதிகமான தொகைக்கு அமெரிக்க தொழில் அதிபர்கள் வாங்கியதாக செய்திகள் வெளியானது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை அமெரிக்க தொழில் அதிபரான கல் சொமானி தலைமையிலான கூட்டமைப்பு வாங்கியதாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சுமார் 15,660 கோடி ரூபாய்க்கு வாங்கியதாக லட்சுமி மிட்டல் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து வாழ் இந்தியரான லட்சுமி மிட்ல் ஸ்டீல் வர்த்தகத்தில் மிகப்பெரிய ஜாம்பவானாக திகழ்கிறார். இவர் தற்போது ஐபிஎல் பிரான்சைஸ் டி20 கிரிக்கெட் லீக் அணியின் உரிமையாளராகி உள்ளார்.
லட்சுமி மிட்டல் உடன் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இநதியாவின் ஆதார் பூனவாலா மற்றும் தற்போதைய முன்னணி உரிமையாளராக இருக்கும் மனோஜ் படலே ஆகியோரும் இந்த கூட்டமைப்பில் பங்கு பெற்றுள்ளனர்.
லட்சுமி மிட்டல் 75 சதவீத பங்குகளையும், பூனவாலா 18 சதவீத பங்குகளையும், மனோஜ் படலே 7 சதவீதம் பங்குகளையும் வைத்துக்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த ஒப்பந்தத்தில் தென்ஆப்பிரிக்கா லீக்கில் விளையாடும் பார்ல் ராயல்ஸ், கரீபியன் பிரீமியர் லீக்கில் விளையாடும் பார்படோஸ் ராயல்ஸ் அணிகளின் உரிமையும் அடங்கும்.
2026 ஐ.பி.எல். தொடர் முடிவடைந்த உடன் அணி உரிமையாளர்கள் மாறுவார்கள்.