

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இதுவரை 47 போட்டிகள் நிறைவடைந்துள்ளன.
இன்று டெல்லியில் நடைபெறும் 48-லீக் போட்டியில் டெல்லி, சென்னை அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, டெல்லி அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரராக கே.எல்.ராகுல் களமிறங்கினார்.
இந்நிலையில், கே.எல்.ராகுல் 12 ரன்கள் எடுத்து அவுட்டானார். இவர் ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் எடுத்து ஆரஞ்சு தொப்பியை கைப்பற்றி உள்ளார். இவர் 10 ஆட்டங்களில் 445 ரன்கள் குவித்து முதலிடத்தில் உள்ளார்.
இரண்டாவது இடத்தில் அபிஷேக் சர்மா 440 ரன்னும், 3வது இடத்தில் ஹென்ரிச் கிளாசன் 425 ரன்னும் குவித்துள்ளனர்.