ராஜஸ்தான் ராயல்ஸ் தொடர் வெற்றியை தடுத்து நிறுத்துமா சன்ரைசர்ஸ் ஐதராபாத்?- இன்றிரவு பலப்பரீட்சை | IPL 2026

ராஜஸ்தான் ராயல் 4 போட்டிகளில் விளையாடி அனைத்திலும் வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் முதலிடம் வகிக்கிறது.
ராஜஸ்தான் ராயல்ஸ் தொடர் வெற்றியை தடுத்து நிறுத்துமா சன்ரைசர்ஸ் ஐதராபாத்?- இன்றிரவு பலப்பரீட்சை | IPL 2026
Published on

ஐ.பி.எல். 2026-ன் 21-வது போட்டி இன்று இரவு ஐதராபாத்தில் நடைபெற இருக்கிறது. இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

ராஜஸ்தான் ராயல்ஸ் தான் விளையாடிய நான்கு போட்டிகளிலும் வெற்றி வாகை சூடியுள்ளது. அந்த அணியின் தொடக்க வீரர்களான சூர்யவன்ஷி, ஜெய்ஸ்வால் ஆகியோர் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இருவரின் அதிரடி ஆட்டத்தால் ராஜஸ்தான் ராயல்ஸ் முதலில் பேட்டிங் செய்தாலும் அதிக ரன்கள் இலக்கு நிர்ணயிக்க முடிகிறது. எதிரணியால் அதிக ரன்கள் இலக்கு நிர்ணயித்தாலும் எளிதாக இலக்கை எட்ட முடிகிறது. இருவரையும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க செய்தால் மட்டுமே சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை கட்டுப்படுத்த முடியும்.

அதேவேளையில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் அபிஷேக் சர்மா, டிராவிஸ் ஹெட், கிளாசன் போன்ற அதிரடி வீரர்கள் உள்ளன. இவர்களை கட்டுப்படுத்துவதும் மிகக் கடினம். சன்ரைசர்ஸ் ஐதராபாத் கடந்த போட்டியில் பஞ்சாப் அணிக்கெதிராக 219 ரன்கள் குவித்தது. என்றாலும் பஞ்சாப் 223 ரன்கள் எடுத்து சேஸிங் செய்து விட்டது.

இதனால் எந்த அணி பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசுகிறார்களோ, அந்த அணிக்கு வெற்றிக் கனியை பறிக்கும்.

ராஜஸ்தான் ராயல்ஸ் கடைசி போட்டியில் ஆர்சிபிக்கு எதிராக 201 ரன்களை சேஸிங் செய்தது குறிப்பிடத்தக்கது.

புள்ளிகள் பட்டியலில் ராஜஸ்தான் ராயல்ஸ் முதல் இடத்திலும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் 4 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்று 7-வது இடத்தில் உள்ளது.

ஐதராபாத்தில் இதுவரை ஒரு போட்டிதான் நடைபெற்றுள்ளது. அதில் ஐதராபாத் அணிக்கெதிராக லக்னோ 156 ரன்களை எளிதாக சேஸிங் செய்தது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com