ரிஸ்க் எடுக்காமல் ரன்கள் குவிக்க ருதுராஜ்-க்கு நல்ல வாய்ப்பு இருந்தது: அஸ்வின் | IPL 2026

சன்ரைசர்ஸ் ஐதராபாத் போட்டி ருதுராஜ் கெய்க்வாட் ரன்கள் குவிக்க வாய்ப்பான போட்டியாக இருந்தது என்று அஸ்வின் தெரிவித்துள்ளார்.
ரிஸ்க் எடுக்காமல் ரன்கள் குவிக்க ருதுராஜ்-க்கு நல்ல வாய்ப்பு இருந்தது: அஸ்வின் | IPL 2026
Published on

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் ஃபார்ம் இன்றி தவித்து வருகிறார். அவர் இதுவரை 6 போட்டிகளில் 82 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார். நேற்றைய போட்டியில் அவர் 13 பந்தில் 19 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். நேற்றைய போட்டியில் அவர் நிதானமாக விளையாடி இழந்த ஃபார்மை மீட்டெடுக்க வாய்ப்பு இருந்தது. ஏனென்றால் ஆயுஷ் மாத்ரே அபாரமாக விளையாடினார். இதனால் அதிரடியாக விளையாடாமல் ருதுராஜ் கெய்க்வாட் ரன்கள் குவிக்க இருந்து வாய்ப்பை இழந்துவிட்டதாக அஸ்வின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அஸ்வின் கூறியதாவது:-

சன்ரைசர்ஸ் ஐதராபாத் போட்டி ருதுராஜ் கெய்க்வாட் ரன்கள் குவிக்க வாய்ப்பான போட்டியாக இருந்தது. ரிஸ்க் அல்லது அதிரடியாக விளையாடி ரன்கள் குவிக்க வேண்டிய அவசியம் அவருக்கு தேவைப்படவி்லை. ஏனென்றால், ஆயுஷ் மாத்ரே அப்படியொரு தொடக்கம் கொடுத்தார். பளர்பிளேயில் நல்ல நிலையில் இருந்தது. இது கொஞ்சம் நேரம் எடுத்துக் கொள்ள, ரன்கள் அடிக்க, மீண்டும் பழைய ஃபார்முக்கு திரும்ப சரியானவையாக இருந்தது.

ஆயுஷ் மாத்ரே ஆட்டமிழந்த பிறகு, ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு அருமையான பந்து வீசப்பட்டது. அந்த பந்து புல்-ஷாட் அடிக்கக் கூடியதற்கானது அல்ல. ருதுராஜ் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளார் என்று நினைக்கிறேன். அவரது மனம் குழப்பம் நிறைந்ததாக உள்ளது.

இவ்வாறு அஸ்வின் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com