IPL 2026 RR vs RCB | ஒரு பக்கம் அதிரடி, மறுபக்கம் விக்கெட் இழப்பு: ஆர்.சி.பி. 6.2 ஓவரில் 62/4

ஆர்சிபி அதிரடியாக ஆட்டத்தை தொடங்கினாலும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.
IPL 2026 RR vs RCB | ஒரு பக்கம் அதிரடி, மறுபக்கம் விக்கெட் இழப்பு: ஆர்.சி.பி. 6.2 ஓவரில் 62/4
Published on

ஐபிஎல் கிரிக்கெட்டில் 16-வது போட்டி கவுகாத்தியில் நடைபெற்று வருகிறது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ்- ஆர்சிபி அணிகள் விளையாடி வருகின்றன. மழையால் ஆட்டம் தாமதமாக தொடங்கப்பட்டது.

ராஜஸ்தான் ராயல்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி சால்ட், விராட் கோலி ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ஆர்ச்சர் முதல் ஓவரை வீசினார். ஆட்டத்தின் முதல் பந்திலேயே சால்ட் ஆட்டமிழந்தார்.

அடுத்து விராட் கோலியுடன் தேவ்தத் படிக்கல் ஜோடி சேர்ந்தார். இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். முதல் ஓவரில் படிக்கல் 2 பவுண்டரியும், கோலி ஒரு பவுண்டரியும் அடித்தனர். இதனால் 13 ரன்கள் கிடைத்தன.

2-வது ஓவரை பர்கர் வீசினார். இந்த ஓவரில் இரண்டு பவுண்டரி, ஒரு பைஸ் பவுண்டரி, ஒரு வைடு பவுண்டரியுடன் 19 ரன்கள் கிடைத்தன. 3-வது ஓவரை ஆர்ச்சர் வீசினார். இந்த ஓவரில் விராட் கோலி 3 பவுண்டரிகள் விளாசினார். என்றாலும் கடைசி பந்தில் படிக்கல் ஆட்டமிழந்தார். அவர் 7 பந்தில் 14 ரன்கள் சேர்த்தார். அப்போது ஆர்சிபி 3 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 45 ரன்கள் விளாசியிருந்தது.

4-வது ஓவரை சந்தீப் சர்மா வீசினார். இந்த ஓவரில் கடைசி இரண்டு பந்தையும் கோலி பவுண்டரிக்கு விரட்டினார். 4 ஓவரில் ஆர்சிபி 2 விக்கெட் இழப்பிற்கு 55 ரன்கள் அடித்திருந்தது.

5-வது ஓவரை ரவி பிஷ்னோய் வீசினார். இந்த ஓவரின் 5-வது பந்தில் விராட் கோலி க்ளீன் போல்டானார். அவர் 16 பந்தில் 7 பவுண்டரியுடன் 32 ரன்கள் சேர்த்தார். அப்போது ஆர்சிபி 3 விக்கெட் இழப்பிற்கு 58 ரன்கள் எடுத்திருந்தது. 6-வது ஓவரை பர்கர் வீசினார். இந்த ஓவரில் 3 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். ஆர்சிபி பவர்பிளேயிலா் 3 விக்கெட் இழப்பிற்று 61 ரன்ள் எடுத்திருந்தது.

7-வது ஓவரை ரவி பிஷ்னோய் வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தில் குருணால் பாண்ட்யா 1 ரன்னில் ஆட்டமிழந்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com