ஆர்.சி.பி.யின் அதிரடியை லக்னோ சமாளிக்குமா?- நாளை சின்னசாமி மைதானத்தில் பலப்பரீட்சை | IPL 2026

சொந்த மைதானத்தில் ஹாட்ரிக் வெற்றி பெற ஆர்சிபி முனைப்பு காட்டும். அதேவேளையில் லக்னோ அணி ஆதிக்கம் செலுத்த முயற்சிக்கும்.
ஆர்.சி.பி.யின் அதிரடியை லக்னோ சமாளிக்குமா?- நாளை சின்னசாமி மைதானத்தில் பலப்பரீட்சை | IPL 2026
Published on

19-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் 23-வது லீக் ஆட்டம் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நாளை இரவு 7.30 மணிக்கு நடக்கிறது. இதில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு- ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதுகின்றன.

4-வது வெற்றி ஆர்வம்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்.சி.பி) 3 வெற்றி, 1 தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்று 3-வது இடத்தில் உள்ளது. அந்த அணி சன்ரைசர்ஸ் ஐதராபாத்தை 6 விக்கெட் வித்தியாசத்திலும், சென்னை சூப்பர் கிங்சை 43 ரன் வித்தியாசத்திலும், மும்பை இந்தியன்சை 18 ரன் வித்தியாசத்திலும் தோற்கடித்தது. ராஜஸ்தான் ராயல்சிடம் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது.

பேட்டிங்கில் வலிமையுடன் இருக்கும் ஆர்.சி.பி. அணி லக்னோவை வீழ்த்தி 4- வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது.

அதிரடி பேட்ஸ்மேன்கள் கேப்டன் ரஜத் படிதார் (195 ரன்), வீராட் கோலி (179), டிம் டேவிட், பில் சால்ட் , தேவ்தத் படிக்கல் போன்ற அதிரடி பேட்ஸ்மேன்களும், குணால் பாண்ட்யா, ஜேக்கப் டபி போன்ற பந்துவீச்சாளர்களும் உள்ளனர்.

சொந்த மண்ணில் விளையாடுவதால் பெங்களூரு அணி கூடுதல் பலத்துடன் திகழ்கிறது. இந்த சீசனில் அந்த அணி முதல் 2 ஆட்டத்திலும் சின்னசாமி மைதானத்தில் ஆடி வெற்றி பெற்றது. உள்ளூர் ரசிகர்கள் ஆதரவு கூடுதல் பலமாகும்.

லக்னோ

லக்னோ அணி 2 வெற்றி, 2 தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்று 7-வது இடத்தில் உள்ளது. ஐதராபாத் (5 விக்கெட்), கொல்கத்தா (3 விக்கெட்) ஆகியவற்றை வென்றது. டெல்லி (6 விக்கெட்), குஜராத் (7 விக்கெட்) அணிகளிடம் தோற்றது.

அந்த அணியில் முன்னணி பேட்ஸ்மேன்கள் சிறப்பாக ஆடாதது பாதிப்பை ஏற்படுத்தியது. பெங்களூருவை வீழ்த்தி 3-வது வெற்றியை பெறும் வேட்கையில் உள்ளது.

இரு அணிகளும் மோதிய 6 போட்டியில் பெங்களூரு 4-ல், லக்னோ 2-ல் வெற்றி பெற்றுள்ளன.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com