

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று சிஎஸ்கே- டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. இதில் சிஎஸ்கே 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
19-வது ஓவரை ஓவர்டன் வீசினார். இதில் ஒரு பந்து வைடு என நடுவர் அறிவித்தார். ஆனால் சி.எஸ்.கே. ரிவ்யூ கேட்டது. அந்த நேரத்தில் கையுறை (Gloves) ஈரமாக இருக்கிறது. இதனால் மாற்று கையுறை கொண்டு வருமாறு பேட்டிங் செய்து கொண்டிருந்த ஸ்டப்ஸ் கேட்டார்.
நிதிஷ் ராணா அதை கொண்டு செல்ல முயன்றார். ஆனால் நடுவர் தடுத்து நிறுத்தினார். அடுத்த பந்தில் ஸ்டப்ஸ் ஆட்டமிழந்தார். அவர் விரக்தியில் வெளியேறினார். இதனால் நிதிஷ் ராணா நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
நிதிஷ் ராணாவில் நடத்தை ஐபிஎல் நன்னடத்தை விதி 2.3-ஐ மீறுவதாகும் என ஐபிஎல் நிர்வாகம் அவருக்கு 25 சதவீதம் அபராதம் விதித்துள்ளது. அத்துடன் போட்டி தடைக்கான ஒரு புள்ளியும் வழங்கியுள்ளது.
தனது குற்றத்தை ஒப்புக்கொண்டு, அபராதத்தை ஏற்றுக் கொண்டார் நிதிஷ் ராணா.