பஞ்சாப் கிங்ஸை வீழ்த்தி முதல் அணியாக பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது ஆர்.சி.பி.

புவனேஷ்வர் குமார், ஹேசில்வுட் சிறப்பாக பந்து வீச பஞ்சாப் கிங்ஸ் அணியால் இலக்கை எட்ட முடியவில்லை.
பஞ்சாப் கிங்ஸை வீழ்த்தி முதல் அணியாக பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது ஆர்.சி.பி.
Published on

ஐ.பி.எல். 2026-ன் 61-வது லீக் போட்டி இன்று மதியம் தரம்சாலாவில் நடைபெற்றது. இதில் பஞ்சாப் கிங்ஸ்- ஆர்சிபி அணிகள் மோதின. முதலில் களம் இறங்கிய ஆர்சிபி 222 ரன்கள் குவித்தது. அந்த அணியின் தொடக்க வீரர் விராட் கோலி 37 பந்தில் 58 ரன்களும், தேவ்தத் படிக்கல் 25 பந்தில் 45 ரன்களும், வெங்கடேஷ் அய்யர் ஆட்டமிழக்காமல் 40 பந்தில் 73 ரன்களும் விளாசினர்.

பின்னர் 223 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் கிங்ஸ் களம் இறங்கியது. தொடக்க வீரர்கள் பிரியான்ஷ் ஆர்யா (0), பிரப்சிம்ரன் சிங் (2) சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

ஷ்ரேயாஸ் அய்யர் 1 ரன்னில் ஏமாற்றம் அடைந்தார். இதனால் 19 ரன்கள் எடுப்பதற்குள் பஞ்சாப் கிங்ஸ் 3 விக்கெட்டுகளை இழந்து திணறியது.

கூப்பர் கொனோலி 37 ரன்களும், சூர்யான்ஷ் ஷெ்ட் 35 ரன்களும் அடிக்க 10.5 ஓவர்களில் 93 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்தது.

6-வது விக்கெட்டுக்கு ஸ்டோய்னிஸ் உடன் ஷசாங்க் சிங் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 16 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் எடுத்திருந்தது. கடைசி 24 பந்தில் 63 ரன்கள் தேவைப்பட்டது.

17-வது ஓவரை ஹேசில்வுட் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் ஸ்டோய்னிஸ் (37) ஆட்டமிழந்தார். அடுத்து ஓமர்சாய் களம் இறங்கினார். 18 ஓவர் முடிவில் பஞ்சாப் 183 ரன்கள் எடுத்திருந்தது. 19-வது ஓவரில் ஹேசில்வுட் 7 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார்.

இதனால் கைடைசி ஓவரில் 33 ரன்கள் தேவைப்பட்டது. ரஷிக் சலாம் தார் கடைசி ஓவரை வீசினார். இந்த ஓவரில் 2 விக்கெட்டுகளை இழந்த பஞ்சாப் அணியால் 9 ரன்கள் மட்டுமே எடுக்கப்பட்டது. இதனால் ஆர்சிபி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஷசாங்க் சிங் 27 பந்தில் 56 ரன்கள் அடித்தும் பயன் இல்லாமல் போனது.

இந்த வெற்றியின் மூலம் ஆர்சிபி 13 போட்டிகளில் 9 போட்டிகளில் வெற்றி பெற்று பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com