மும்பைக்கு எதிரான போட்டியில் வெற்றி: சிஎஸ்கே சாதனையை சமன் செய்த ஆர்.சி.பி. | IPL 2026

ஆர்.சி.பி. முதலில் பேட்டிங் செய்து 200 ரன்களுக்கு மேல் அடித்து 23 முறை வெற்றி பெற்றுள்ளது.
மும்பைக்கு எதிரான போட்டியில் வெற்றி: சிஎஸ்கே சாதனையை சமன் செய்த ஆர்.சி.பி. | IPL 2026
Published on

ஐபிஎல் 2026-ல் 20-வது போட்டி நேற்று வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில் மும்பை இந்தியன்ஸ- ஆர்சிபி அணிகள் மோதின. முதலில் விளையாடிய ஆர்சிபி 240 ரன்கள் குவித்தது. பின்னர் 241 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் களம் இறங்கியது. அந்த அணியால் 222 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இதன்மூலம் ஆர்சிபி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிராக தொடர்ந்து 6 முறை தோல்வியடைந்த பிறகு, தற்போது இரண்டு முறை தொடர்ச்சியாக ஆர்சிபி வெற்றி பெற்றுள்ளது.

மேலும், மும்பை இந்தியன்ஸ்க்கு எதிராக கடைசி 8 போட்டிகளில் 6 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.

மேலும், 200 ரன்களுக்கு மேல் அடித்து எதிரணியை வீழ்த்தியது ஆர்.சி.பி.க்கு இது 23-வது முறையாகும். இதற்கு முன்னதாக சிஎஸ்கே முதலில் பேட்டிங் செய்து 200 ரன்களுக்கு மேல் அடித்து 23 முறை எதிரணியை வீழ்த்தியுள்ளது. இதன்மூலம் சிஎஸ்கே அணி சாதனையை முறியடித்துள்ளது.

மும்பை மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் 18 முறை வெற்றி பெற்றுள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 15 முறை வெற்றி பெற்றுள்ளன.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com