IPL 2026 | தொடக்க போட்டிகளில் மதீஷா பத்திரனா பங்கேற்க மாட்டார் - KKR அணிக்கு பின்னடைவு

மதீஷா பத்திரனாவை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ரூ.18 கோடிக்கு ஏலம் எடுத்தது.
Matheesha Pathirana
Matheesha Pathirana
Published on

19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் மினி ஏலத்தில் இலங்கையைச் சேர்ந்த மதீஷா பத்திரனாவை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ரூ.18 கோடிக்கு ஒப்பந்தம் செய்தது.

இதனுடையே இலங்கை அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் பத்திரனா காலில் ஏற்பட்ட தசைப்பிடிப்பு காரணமாக நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் இருந்து விலகினார்ர்.

இந்நிலையில், காயத்தில் இருந்து முழுமையாக குணமடையாத கொல்கத்தா வீரர் மதீஷா பத்திரனா தற்போது மருத்துவ குழுவின் தீவிர கண்காணிப்பில் உள்ளார். இதனால் நடப்பு ஐபிஎல் தொடரில் பங்கேற்பாரா என்று கேள்வி எழுப்பப்பட்டது.

இந்நிலையில், ஐபிஎல் 2026-ன் தொடக்கத்தில் சில போட்டிகளில் பத்திரனா பங்கேற்க மாட்டார் என்றும் ஏப்ரல் மாத மத்தியில் அவர் அணியில் இணைவார் என KKR பயிற்சியாளர் அபிஷேக் நாயர் தகவல் தெரிவித்துள்ளார்.

அவருக்கு உடற்தகுதி சோதனை நடத்திய பிறகே ஐபிஎல் தொடரில் பங்கேற்பதற்கான தடையில்லா சான்று வழங்கப்படும் என இலங்கை கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com