

ஐ.பி.எல். 2026-ல் 16-வது லீக் போட்டி கவுகாத்தில் நடக்கிறது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ்- ஆர்சிபி அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ராஜஸ்தான் ராயல்ஸ் தான் விளையாடிய மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. ஆர்சிபி தான் விளையாடிய 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில் தோல்வியடையும் அணி முதல் தோல்வியை சந்திக்கும். கவுகாத்தில் லேசான மழை பெய்து வருவதால் டாஸ் சுண்டப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.