IPL 2026 | பஞ்சாப் கிங்ஸ்க்கு 163 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது குஜராத் டைட்டன்ஸ்

சுப்மன் கில் 39 ரன்களும், பட்லர் 38 ரன்களும் அடித்தனர்.
IPL 2026 | பஞ்சாப் கிங்ஸ்க்கு 163 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது குஜராத் டைட்டன்ஸ்
Published on

சண்டிகரில் நடைபெற்று வரும் ஐபிஎல் 2020 சீசனின் 4-வது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. டாஸ் வென்று பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி குஜராத் டைட்டன்ஸ் அணியின் சுப்மன் கில், சாய் சுதர்சன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். சாய் சுதர்சன் 11 பந்தில் 13 ரன்கள் எடுத்த நிலையில் யான்சன் பந்தில் ஆட்டமிழந்தார்.

அடுத்து சுப்மன் கில் உடன் பட்லர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பாக விளையாடியது. இருந்தாலும் 27 பந்தில் 39 ரன்கள் எடுத்த நிலையில் சுப்மன் கில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கிளென் பிளிப்ஸ் 17 பந்தில் 25 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார்.

4-வது விக்கெட்டுக்கு பட்லர் உடன் வாஷிங்டன் சுந்தர் ஜோடி சேர்ந்தார். குஜராத் டைட்டன்ஸ் 15 ஓவரில் 128 ரன்கள் எடுத்திருந்தது.

பட்லர் 33 பந்தில் 38 ரன்கள் எடுத்திருந்த நிலையில், சாஹல் பந்தில் ஆட்டமிழந்தார். 5-வது விக்கெட்டுக்கு வாஷிங்டன் சுந்தர் உடன் ஷாருக் கான் ஜோடி சேர்ந்தார். வாஷிங்டன் சுந்தர் 18 ரன்னிலும், ஷாருக் கான் 4 ரன்னிலும் ஆட்டமிழந்தார்.

டெவாட்டியா 10 பந்தில் 11 ரன்கள் அடிக்க குஜராத் டைட்டன்ஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் சேர்த்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com