

ஐ.பி.எல். 2026-ல் 56-வது லீக் போட்டி அகமதாபாத்தில் நடைபெற்று வருகிறது. இதில் குஜராத் டைட்டன்ஸ்- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி குஜராத் டைட்டன்ஸ் அணியின் சாய் சுதர்சன், சுப்மன் கில் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். கில் 5 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த பட்லர் 7 ரன்னில் ஏமாற்றம் அடைந்தார். நிஷாந்த் சிந்த 14 பந்தில் 22 ரன்கள் சேர்த்தார். சாய் சுதர்சன் 44 பந்தில் 61 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
வாஷிங்டன் சுந்தர் 33 பந்தில் 50 ரன்கள் எடுத்து கடைசி ஓவரின் 5-வது பந்தில் ஆட்டமிழந்தார். இதனால் குஜராத் டைட்டன்ஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் அடித்துள்ளது. ஐதராபாத் அணியில் பிரபுல் ஹிங்கே, சஹிப் ஹுசைன் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.