LSG அணியில் ஹசரங்காவுக்குப் பதிலாக தென்ஆப்பிரிக்கா ஆல்-ரவுண்டர்

லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் இலங்கை வீரர் ஹசரங்காவுக்குப் பதிலாக தென்ஆப்பிரிக்காவின் ஜார்ஜ் லிண்டேவை ஒப்பந்தம் செய்துள்ளது.
LSG அணியில் ஹசரங்காவுக்குப் பதிலாக தென்ஆப்பிரிக்கா ஆல்-ரவுண்டர்
Published on

லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியில் இலங்கையை சேர்ந்த ஹசரங்கா இடம் பிடித்திருந்தார். டி20 உலகக் கோப்பையின்போது இவருக்கு காயம் ஏற்பட்டது. இதனால் ஐபிஎல் போட்டியில் பங்கேற்பாரா? என்ற கேள்வி எழுந்தது.

இந்த நிலையில் அவர் ஐபிஎல் தொடர் முழுவதும் விளையாடமாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அவருக்குப் பதிலாக தென்ஆப்பிரிக்காவின் ஜார்ஜ் லிண்டே என்ற ஆல்-ரவுண்டரை ஒரு கோடி ரூபாய்க்கு எல்எஸ்ஜி அணி எடுத்துள்ளது.

இவர் தென்ஆப்பிரிக்கா அணிக்காக 3 டெஸ்ட், 4 ஒருநாள் மற்றும் 37 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். இதுவரை ஐபிஎல் போட்டிகளில் விளையாடியது கிடையாது.

லக்னோ வரும் ஞாயிறு குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. முதல் போட்டிகளில் தோல்வியடைந்த எல்எஸ்ஜி அடுத்த இரண்டு போட்டிகளிலும் கடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்றுள்ளது.

ஹசரங்காவை 2 கோடி ரூபாய்க்கு லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஏலம் எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com